இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
மலையாளத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். பிரபல கதாசிரியரும், இயக்குனருமான பிளஸ்சி, ஆடு ஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பதன மூலம் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக பிரித்விராஜ் நடித்துள்ளார்
கடந்த இரண்டு வருடங்களாக இதன் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சம்மர் விடுமுறையை குறிவைத்து வரும் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என இதன் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய திருப்பமாக, முன்கூட்டியே அதாவது மார்ச் 28ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓடிடி தளங்களுக்கு படங்கள் கொடுப்பது குறித்த ஒப்பந்த பிரச்னை காரணமாக திரையரங்குகள் புதிய மலையாள படங்களை இந்த வராத்திலிருந்து திரையிடுவதில்லை என போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இப்படி முன்கூட்டியே ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிடுவது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனைக்கு ஏற்ப ஆடுஜீவிதம் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், போராட்டம் நடைபெற்றாலும் அல்லது முடிவுக்கு வந்தாலும் இந்த படத்தை வெளியிட எந்த தடையும் இருக்காது என படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.