அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. சமீபத்தில் 'அந்தோனி, சல்லியர்கள்' படங்கள் வெளியானது. இந்த நிலையில் 'நீளிரா' என்ற படம் தயாராகி வருகிறது. பாலு மகேந்திராவின் உதவியாளர் சோமிதரன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப் படங்களை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நவீன் சந்திரா, சனத், ரூபா கொடுவாயூர், கபிலா, விது, சிது குமரேசன், வின்சென்ட், ரோஹித் கோகடே ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்டோன் பென்ச் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஸ்பிரிட் சார்பில் நடிகர் ராணா டகுபதி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் சோமிதரன் கூறும்போது “பாலுமகேந்திராவிடம் பணியாற்றியபோது நான் இலங்கையில் பிறந்தாலும் அங்குள்ள மக்கள் பற்றி ஒரு படம் இயக்க முடியவில்லை. நீயாவது படம் இயக்கும்போது முதல் படமாக நம் மக்களின் வாழ்க்கையை படமாக எடு என்றார். அவரது ஆசையை நிறைவேற்றவவே இந்த படத்தை இயக்கி உள்ளேன்.
கணவனுக்காக மனைவி காத்திருக்கும் நீண்ட இரவை 'நீளிரா' என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடுவார்கள். அதுதான் இந்த படத்தின் ஒன்லைன் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறேன். பொதுவாக யுத்தம் என்றால் ரத்த ஆறு ஓடும் என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யுத்தம் நடக்கும்போது காதல் வருகிறது. கல்யாணங்கள் நடக்கிறது.
பல குடும்பங்கள் ஒரு கல்யாணத்திற்காக திரண்டிருக்கும் நேரத்தில் யுத்தம் வெடிக்கிறது. அதன்பிறகு அந்த கல்யாண வீட்டில் என்ன நடக்கிறது. சூழ்நிலைகளை சமாளித்து அந்த திருமணத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை”என்றார்.