''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தங்கமணி. பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தங்கமணி என்கிற கிராமத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற உடல் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் தங்கமணி கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த படம் தங்களது கிராமத்தின் பெயரையும், புகழையும் சீர்குலைக்கும் விதமாக உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும். மேலும் தங்கமணி என்கிற பெயரையும் படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது இந்த திரைப்படம் தணிக்கை செய்யப்படுவதற்காக சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் படத்தை பார்க்கும் சென்சார் அதிகாரிகள் இந்த தங்கமணி டைட்டிலை வைப்பதால் ஏதாவது சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா, படத்தில் சம்பந்தப்பட்ட ஊருக்கு ஏதேனும் களங்கம் ஏற்படும் விதமாக காட்சிகள் இருக்கிறதா என்பது குறித்து தங்களது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்சார் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இந்த படத்தின் டைட்டில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்பது தெளிவாகியுள்ளது.