''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியான ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவை ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதனால் நன்றாக ஓடும் படங்கள் கூட, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படி ஓடிடியில் வெளியாவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மலையாள தயாரிப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டு உள்ளனர்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் பலரும் ஒப்பந்தத்தை மீறி முன்கூட்டியே தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வரும் பிப்., 22 முதல் கேரளா திரையரங்குகளில் மலையாள படங்களை திரையிட மாட்டோம் என முடிவெடுத்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் இது மற்ற மொழி படங்களையும், இதற்குமுன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படங்களையும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.