'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் படம் தேவரா. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட் நடிகர் சைப் அலிகான் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூனியர் என்டிஆரின் ஆக்ஷன் தோற்றம் கொண்ட ஒரு போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள டிசைன் இதற்கு முன்பு தற்போது பிரபாஸ் நடித்து வரும் கல்கி படத்தின் போஸ்டர் டிசைன் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் சிலரே இந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆக்ஷன் ஹீரோக்களின் போஸ்டர்கள் எல்லாமே சமீபகாலமாக ஒரே பாணியில் தான் வெளியாகி வருவதை தேவரா படத்தின் போஸ்டரும் உறுதிப்படுத்தி உள்ளது. இப்படி போஸ்டர்களை உருவாக்கும்போது வேறு ஹீரோக்களின் பட போஸ்டர்கள் சாயல் இல்லாமல் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.