'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் சல்மான், பார்வதி இருவரும் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு சார்லி என்கிற படத்தில் இணைந்து நடித்த இவர்கள் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர். ஆனால் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவில்லை.. அவர்தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.. இதில் கதாநாயகியாக பார்வதி நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதுவும் பார்வதி விரும்பவது போல பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் தான். ஆனால் இதுவரை பார்வதி ஏற்று நடித்திராத கிட்டத்தட்ட மலையாள சினிமாவிற்கே புதிதான பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.
துல்கர் சல்மானுடன் ஜி ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறது. அதே சமயம் இன்னும் படத்தின் இயக்குனர் மற்ற நடிகர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.