நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. அதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் படம் ஒன்று. மற்றொன்று ஏற்கனவே திரிஷ்யம், டுவல்த் மேன் என தொடர்ந்து வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் ஜீத்து ஜோசப்பின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ‛நேர்' திரைப்படம். இந்த படம் முழுக்க முழுக்க நீதிமன்றத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. மோகன்லால் இதில் வழக்கறிஞராக நடித்துள்ளார். கதாநாயகியாக இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடப்பதாகவும், ஒரு முக்கிய வழக்கை துவங்கி அதன் பின்னணியில் ஒளிந்துள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மோகன்லால் நடத்தும் சட்டப் போராட்டம் தான் இந்த படம். வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மோகன்லால். அந்த வகையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் தனது நீண்டநாள் ஆன்லைன் நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து குரூப் செல்பி எடுத்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.