அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி |
தெலுங்கு திரையுலகில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தனக்கென ஒரு ரூட்டில் பயணித்து வருபவர் நடிகர் ரவிதேஜா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் அடுத்தவாரம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ரவிதேஜா. அப்படி ஒரு வட இந்திய சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தொகுப்பாளர், ரவிதேஜாவிடம் நான் சொல்லும் ஒவ்வொரு ஹீரோக்களிடம் இருந்தும் நீங்கள் எந்த விஷயத்தை திருடிக்கொள்ள விரும்புவீர்கள் என பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அப்படி ராம்சரண் மற்றும் விஜய் பற்றி கேட்டபோது அவர்கள் இருவருமே அற்புதமான நடன திறமை கொண்டவர்கள் அவர்களிடமிருந்து நடனத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் ரவி தேஜா. அதேபோல ராஜமவுலியிடம் இருந்து அவரது விஷனை எடுத்துக்கொள்வேன். பிரபாஸிடம் இருந்து அவரது பொலிவான தோற்றத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.
அடுத்ததாக யஷ் பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்த ரவிதேஜா, அவர் நடித்த கேஜிஎப் திரைப்படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருக்கு கேஜிஎப் திரைப்படம் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம் தான். அந்த அதிர்ஷ்டத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். ஆனால் இவர் எதார்த்தமாக கூறிய இந்த வார்த்தைகள் யஷ் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி விட்டன
இதைத்தொடர்ந்து பலரும் ரவி தேஜாவுக்கு தங்களது கண்டனங்களை தொடர்ந்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களுக்காக கிட்டத்தட்ட ஆறு வருடம் தனது கடின உழைப்பை கொடுத்து இந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார் யஷ். அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் இல்லை. இத்தனை வருடங்கள் தெலுங்கில் இருந்தாலும் நூறு கோடி வசூல் என்கிற ஒரு படத்தை கூட ரவிதேஜா கொடுத்ததில்லை.. ஆனால் கன்னட நடிகரான யஷ் தெலுங்கில் 100 கோடி வசூல் என்கிற சாதனையை செய்து விட்டார். ரவிதேஜாவின் பேச்சிலிருந்து அவரது பொறாமை உணர்வு தான் வெளிப்பட்டுள்ளது என்று கருத்து கூறி வருகின்றனர்.