பெத்தி : மகன் ராம்சரண் பற்றி பெருமைப்படும் அப்பா சிரஞ்சீவி | முதல்வர் விஜயை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை | எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து | கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்! | இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்! | ஹிந்தி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! | என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம் | நல்ல கதைக்காக காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் | உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' | 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா அஞ்சனா நேத்ரன் |

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி வெளியாகும் திரைப்படம் ' டைகர் நாகேஸ்வர ராவ்'. அனுபம் கெர், ரேணு தேசாய், நுபூர் சனோன் , காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர், டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் நீளம் 3 மணி நேர 1 நிமிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படங்களில் ராஜமவுலி படங்களை தவிர்த்து பெரும்பாலும் இவ்வளவு நீளம் உள்ள படங்கள் வெளிவராது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




