குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷி திரைப்படம் வெளியானது. சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது.
இந்த நிலையில் இந்த வெற்றிக்காக கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அதுமட்டுமல்ல 100 குடும்பங்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உதவி செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு முன்னால் வெளியான விஜய் தேவரகொண்டாவின் லைகர் மற்றும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இதில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தை தயாரித்த அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் தேவரகொண்டாவிற்கு கிண்டலாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், "அன்புள்ள விஜய் தேவரகொண்டா... உங்களை வைத்து படம் எடுத்து விநியோகம் செய்த வகையில் எட்டு கோடி ரூபாய் எங்களுக்கு நஷ்டமானது. அது பற்றி ஒருவருமே பொருட்படுத்தவில்லை. நீங்கள் தற்போது 100 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது உங்களது பெரிய மனதை காட்டுகிறது. தயவுசெய்து எங்களுக்கும் திரையரங்கு அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களின் குடும்பங்களுக்கும் இதுபோல உதவி செய்து காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து தன்னை வைத்து படம் எடுத்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஏன் விஜய் தேவரகொண்டாவிற்கு மனம் வரவில்லை என முன்னர் பாராட்டிய அதே நெட்டிசன்களில் பலர் தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர்.