‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மலையாள சினிமாவில் நடிகர் மம்முட்டி முன்னனி நடிகராக இருந்தாலும் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து ரசிகர்களை கவரும் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் ' பிரமயுகம்' படத்தில் நடிக்கிறார். ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இதில் மம்முட்டி பாம்புகள் உடன் வாழும் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024ல் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் இந்த பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.