பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
கடந்த வருடத்திற்கான கேரளா அரசின் 53வது திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கும் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது 'அறியிப்பு' என்கிற படத்தை இயக்கியதற்காக இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கு கிடைத்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவர் கடந்த 2021ல் பகத் பாசிலை வைத்து இயக்கிய ‛சி யூ சூன்' என்கிற படத்திற்கும் 2022ல் வெளியான நாயாட்டு என்கிற படத்திற்கும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரளா அரசின் விருதை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். அந்த வகையில் இந்த வருடம் கிடைத்த விருதின் மூலம் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார் மகேஷ் நாராயணன்.
இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டேக் ஆப், வைரஸ், மாலிக் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்த விருது கிடைத்தது பற்றி மகேஷ் நாராயணன் கூறும்போது, “எனது படத்திற்கு ஏதோ ஒரு விருது கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.