பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர். அந்த வகையில் அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் கடந்த 2019ல் தொரசாணி என்கிற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்தும் விட்டார். இந்த நிலையில் நேற்று ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள பேபி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அதற்கு முன்னதாக இந்த படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்ததும் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மற்றும் படத்தின் நாயகி வைஷ்ணவி இருவரையும் தோளோடு தோள் சேர்த்து இறுக்கி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய் தேவரகொண்டா.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், படம் பார்த்துவிட்டு பல இடங்களில் தான் அழுததாகவும் கூறியுள்ளார். அதற்கு பிறகான சிரிப்பும் சந்தோஷமும் தான் இது என்று கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது தம்பியும் படத்தின் நாயகி வைஷ்ணவியும் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.. மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் பாராட்டி உள்ளார்.