பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? |

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கு ‛பேமிலி ஸ்டார்' என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். கூடுதலாக, இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் பொங்கலுக்கு குண்டூர் கராம், ஈகிள், ஹனுமான் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.