நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாளத்தில் கடந்த வெள்ளியன்று நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்த பத்மினி என்கிற திரைப்படம் வெளியானது. அபர்ணா பாலமுரளி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனில் வர்க்கி என்பவர் நாயகன் குஞ்சாக்கோ போபன் மீது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இந்த படம் கடந்த வாரமே வெளியாக வேண்டியது. ஆனால் மழை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி உள்ளது. ஆனால் படத்தின் நாயகன் குஞ்சாக்கோ போபன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் நண்பர்களோடு சேர்ந்து உற்சாகமாக சுற்றி வருகிறார். 25 நாட்களுக்கு அவருக்கு இரண்டரை கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. படம் எங்களுக்கு டீசன்டான வசூலை தந்து வருகிறது.. ஆனால் அது விஷயம் அல்ல..
நடிகர் குஞ்சாக்கோ போபன் பல டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது.. ஆனால் தன்னுடைய படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது ஆச்சரியம் தான் என்று கூறியுள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் குஞ்சாக்கோ போபன் தான். அப்படி இருந்தும் கூட அவருக்கு சம்பளமாக இரண்டரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சம்பளம் வாங்கிக் கொண்டும் புரமோசனுக்கு வராத காரணத்தால் படத்தின் தயாரிப்பாளர் தற்போது தான் வெளியிடும் போஸ்டர்களில் குஞ்சாக்கோ போபனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை நீக்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் லண்டனில் தான் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் போது நடிகர் குஞ்சாக்கோ போபன் அவரது மனைவி மற்றும் இன்னொரு நடிகரான ரமேஷ் பிஷரோடி ஆகியோருடன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.