வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
மோகன்லாலின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் மலைக்கோட்டை வாலிபன். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இந்த படத்தை இயக்கி வருகிறார். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு மல்யுத்த வீரரின் கதையாக உருவாகி வருகிறது.
ராஜஸ்தானில் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் போட்டி நிறைந்த அரங்கில் இரண்டு பக்கமும் கூடியுள்ள பார்வையாளர்கள் இரு பிரிவாக பிரிய அதன் நடுவில் மோகன்லால் இரண்டு தோள்களுக்கு மேலிருந்து தனது கைகளால் மிகப்பெரிய வடத்தை பிடித்து இழுத்தபடி வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.