விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தெலுங்கு திரையுலகில் எண்பதுகளில் வில்லனாக, கதாநாயகனாக நடித்து தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் மோகன்பாபு. இவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு மற்றும் மகள் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். சமீபத்தில் மோகன்பாபுவின் இளைய மகன் மனோஜ் மஞ்சு, பூமா ரெட்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோஜ் மஞ்சு வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது சகோதரர் விஷ்ணு மஞ்சு, தனது பூமா ரெட்டி சம்பந்தப்பட்ட உறவினர் வீட்டிற்கு சென்று அவரை அடித்தார் என்றும் அதை தடுக்க சென்ற மனோஜ் மஞ்சுவையும் அடிக்க முற்பட்டார் என்பதாகவும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதுதான் இப்போதைய சூழ்நிலை என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்ட மனோஜ் மஞ்சு, அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அந்த வீடியோவை நீக்கிவிட்டார். ஆனாலும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த சர்ச்சை வீடியோ குறித்து கூறியுள்ள விஷ்ணு மஞ்சு, விரைவில் தொலைக்காட்சி ஒன்றில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோவுக்காகத்தான் இதெல்லாம் படமாக்கப்பட்டன. கிட்டதட்ட ஆறு மாதமாக இதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த ரியாலிட்டி ஷோவில் மஞ்சு குடும்பத்தினரின் ஒவ்வொரு நாள் வாழ்க்கை என்கிற வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதற்காகத்தான் இப்படி ஒரு காட்சியும் படமாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய சகோதரரை தான் தாக்க முயற்சித்த தகவலை இப்படி திசைமாற்ற விஷ்ணு மஞ்சு முயற்சிக்கிறாரா அல்லது உண்மையிலேயே இது ரியாலிட்டி ஷோவுக்காக எடுக்கப்பட்டது தானா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதே சமயம் அவரது சகோதரர் மனோஜ் மஞ்சு மற்றும் சகோதரி லட்சுமி மஞ்சு ஆகியோரிடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.