சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
மலையாள முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், ரீமா கலிங்கல் நடித்துள்ள 'நீல வெளிச்சம்' என்ற படம் வருகிற 20ம் தேதி தியேட்டர்களில் வெளிவருகிறது. ஆஷிக் அபு இயக்கி உள்ளார். இந்த படம் 1964ம் ஆண்டு வெளிவந்த 'பார்கவி நிலையம்' என்ற படத்தின் ரீமேக் ஆகும். வைக்கம் முகமது பஷீரின் கதையை ஏன்.வின்சென்ட் இயக்கி இருந்தார். இதில் பிரேம் நசீர், மது, விஜய நிர்மலா உள்பட பலர் நடித்திருந்தனர்.
'பார்கவி நிலையம்' படத்திற்கு எம்.எஸ்.பாபுராஜ் இசை அமைத்திருந்தார். அவரது பாடல்களை அப்படியே நீல வெளிச்சம் படத்தில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் அனுமதியின்றி பாபுராஜின் பாடல்களை பயன்படுத்தி இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இசை அமைப்பாளர் பாபுராஜ் குடும்பத்தினர் திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.