ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி | 2015ல் தேங்காத தண்ணீர் இந்த மழையில் தேங்கியது ஏன்? : நடிகை கீர்த்தி பாண்டியன் காட்டம் | அவமானமாக உணர்கிறேன் : ஜோதிகா பட இயக்குனர் | 'ரெட் கார்ப்பெட், ரெட் கவுன்' : நிறைவேறிய ஷாரூக்கான் ஆசை | ஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா நடிகர் கைது | இப்படித்தான் டின்னர் சாப்பிடணும் - ஜான்வி கபூர் | ரஜினி பிறந்தநாளில் 'ரஜினி 170, லால் சலாம்' அப்டேட்ஸ் | நாளை டிசம்பர் 8ல் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ்.
கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்காக சுரேஷ்கோபிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு 2006ல் இவர்கள் கூட்டணி அஸ்வரூதன் என்கிற படத்திற்காக இணைந்தது தற்போது 17 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் களியாட்டத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என இயக்குனர் கூறினாலும் அதன் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் உருவாகிறது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.