பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் |

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார்கள். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் 1970களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்டுவர்ட்புரம் என்ற பகுதியை சேர்ந்த ரயில் திருடன் நாகேஸ்வரராவை பற்றிய உண்மை கதை. இவன் சிறையில் இருந்து தப்பிப்பதில் திறமைசாலி. 20 முறை சிறையில் இருந்து தப்பித்திருப்பதாக கூறுவார்கள். இவன் சிறையில் இருந்து தப்பிப்பதை வைத்தே சிறையின் பாதுகாப்பு விதிகளை மாற்றியதாக கூறப்படுவதுண்டு.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. டைகர் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற அக்டோபர் 20ம் தேதி நவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.




