ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி உபாசனா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற சந்தோஷ தகவலையும் வெளியிட்டிருந்தார் ராம்சரண். திருமணமாகி பத்து வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒரு புதிய வாரிசை தங்கள் குடும்பத்தில் எதிர்நோக்கி காத்திருக்கும் ராம்சரண், அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக தனது வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி ஒன்றையும் நடத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் ராம்சரண் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது இந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களான அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவரது சகோதரர் அல்லு சிரிஷ் மற்றும் இதே குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர்களான சாய் தரம் தேஜ், வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.