அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் லைகர். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இந்தியில் முதன்முறையாக இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆகஸ்ட் 25 படம் வெளியாவதை தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தை புறக்கணியுங்கள் என்கிற விதமாக பாய்காட் லைகர் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறது. இப்படி இந்த படத்தை நெட்டிசன்கள் புறக்கணிக்க சொல்வதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட்டின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இணைந்து தயாரித்திருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. காரணம் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்த்து விடும் நெப்போட்டிசத்தை ஆதரிப்பதில் பாலிவுட்டில் கரண் ஜோஹர் முதல் ஆளாக இருப்பதாகவும், குறிப்பாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரணத்திற்கு பின்னணியில் இவர் தான் காரணமாக இருப்பதாகவும் பலரும் கடந்த இரண்டு வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் இந்தப்படத்தை புறக்கணியுங்கள் என ஒரு சாரர் கூறி வருகின்றனர்.
இது ஒரு காரணம் என்றால், படத்தின் நாயகியாக நடித்துள்ள அனன்யா பாண்டே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். குறிப்பாக ஷாருக்கானின் மகனுடன் இணைந்து போதைப்பொருள் பயன்படுத்துவதில் ஈடுபட்டதாக இவர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இப்படி போதை கலாச்சாரத்தில் சிக்கிய ஒரு நடிகை இந்த படத்தில் நடித்திருப்பதால் இதை புறக்கணிப்போம் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இந்த படத்தை புறக்கணிப்பதாக கூறிய நெட்டிசன்கள் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி டீபாய் மேல் ஷூ அணிந்த கால்களை தூக்கி வைத்து பேசியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியதுடன் ரசிகர்கள் மத்தியில் அவரது இந்த செயல் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
கரண் ஜோஹர், அனன்யா பாண்டே உள்ளிட்ட பாலிவுட் நபர்களுடன் பழகினால் இப்படித்தான் மோசமான பழக்கங்கள் தொற்றிக்கொள்ளும் என்று கூறி விஜய் தேவரகொண்டாவை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் பாய்காட் லைகர் என்கிற வாசகம் சோசியல் மீடியாவில் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் நடிகர் விஜய் தேவரகொண்டா இது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் கரண் ஜோஹர் இந்தப்படத்தில் இணைந்திருப்பதால் தான் உலக அளவில் இந்தப்படம் கவனம் பெற்றுள்ளது என கூறிக்கொண்டு வழக்கம்போல படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.