4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த விஜய்பாபு பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பினார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆஜரான அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.
அதேசமயம் அவர் ஜூன் 27 முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தினசரி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அவரை தடயங்கள் சேகரிப்பதற்காக புகாரில் கூறப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க விஜய்பாபுவின் ஜாமீனை ரத்து செய்யும் விதமாக உச்ச நீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இது வழக்கமான பாலியல் பலாத்கார வழக்கு என்றால் பெரிய அளவில் கேரள அரசிடம் இருந்து ரியாக்சன் இருந்திருக்காது. ஆனால் விஜய்பாபுவோ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு போலீசாருக்கு சவால் விடும் விதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று கண்ணாமூச்சி ஆடினார். அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் கையை பிசைந்தது கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்பாபு மீது கோபத்தில் இருக்கும் கேரள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.