பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாள திரையுலகில் பிரபல சீனியர் நடிகர் சீனிவாசனின் இளைய மகன் தயன் சீனிவாசன். இவர் இயக்குனர் வினித் சீனிவாசனின் தம்பியும் கூட. நடிகராக நடித்துக் கொண்டிருந்த இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பை தொடர்ந்து வரும் தயன் சீனிவாசன், தற்போது ஜெயிலர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் ஜெயிலர் என்கிற படம் உருவாக இருக்கிறது. என்றாலும் அதன் கதை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அதேசமயம் இந்த ஜெயிலர் படம் 1956 முதல் 1957 வரை ஒரு வருட காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் தயன் சீனிவாசன் நடித்துள்ளார். சிறையில் உள்ள 5 கைதிகளை தான் தங்கியிருக்கும் இடத்தில் வைத்து திருத்துவதற்கு முயற்சிக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு தமிழில் பல்லாண்டு வாழ்க படத்தில் எம்ஜிஆர் நடித்த கதாபாத்திரம் போன்றது தான் இதுவும். அந்த வகையில் எம்ஜிஆர் படக்கதை, ரஜினி பட டைட்டில் என அசத்துகிறார் நடிகர் தயன் சீனிவாசன்.