ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது தந்தையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தந்தை பற்றிய பதிவுகளையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால் தந்தையர் தினத்தன்று பிரபல சீனியர் மலையாள நடிகர் மதுவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மோகன்லால் திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் மது. தமிழில் தர்மதுரை படத்தில் ரஜினிகாந்தின் அப்பாவாக இவர்தான் நடித்திருந்தார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் மது. இவருடனான சந்திப்பு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன்லால், “மது சார் பல படங்களில் என்னுடைய தந்தையாக நடித்துள்ளார். அவரும் எனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட எனக்கு ஒரு தந்தையை போன்றவர் தான். அது மட்டுமல்ல எனது நடிப்பிற்கான குருவும் கூட. தந்தையர் தினத்தன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கக் வாய்ப்பு கிடைத்ததில் நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் மோகன்லால்.