ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நிவின்பாலி நடித்த கனகம் கலகம் காமினி படம் கடந்த வருடம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியானது. இது கொரோனா காலகட்டத்திலேயே குறுகிய கால தயாரிப்பாக உருவாக்கி வெளியான படம்.. ஆனால் கொரோனா முதல் அலைக்கு முன்பாகவே நிவின்பாலி நடிப்பில் துவங்கப்பட்ட படம் தான் துறமுகம். துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தை இயக்கிய ராஜீவ் ரவி தான் இந்தப்படத்தை' இயக்கியுள்ளார். கடந்த வருடமே இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவழியாக வரும் ஜூன்-3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பும் வெளியானது.
ஆனால் தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி, அதாவது ஜூன்-10ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக புது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல், பஹத் பாசில், விஜய்சேதுபதி என நட்சத்திர பட்டாளத்துடன் விக்ரம் படமும் இதே தேதியில் வெளியாவதால் நிவின்பாலி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விட்டதாக சொல்லப்ட்டது. இந்தநிலையில் சில பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவார காலத்திற்குள் அது சரிசெய்யப்பட்டு ஜூன்-1௦ஆம் தேதி வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.




