சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கடந்த 2018ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ஒடியன். மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்தப்படத்தை விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கி இருந்தார். தங்களுக்கு பிடிக்காத எதிரிகளை மிருகங்களை போல உருமாறி தாக்கும் வித்தை கற்றிருந்த ஒடியன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது உருவத்தோற்றமே வித்தியாசமாக இருந்தது. புலி முருகன் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த படம் ஹிந்தியில் யூடியூப் சேனல் ஒன்றில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த பத்து நாட்களில் இந்த படத்தை 11 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். ஒரு மலையாள படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப் சேனலில் இவ்வளவு குறைந்த நாட்களில் இந்த அளவு பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது இதுவே முதல்முறையாகும்.