பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி |
கடந்த சில வாரங்களாக மோகன்லால், மம்முட்டி ஆகியோர் நடித்த படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின. இதனால் ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என யோசித்து வந்து மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் எல்லாம் தற்போது தைரியமாக தங்களது படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.. அந்தவகையில் இன்று(மே 27) மலையாளத்தில் வெளியாகும் நான்கு படங்களில் குட்டாவும் சிக்ஷையும் மற்றும் ஜான் லூதர் என இரண்டு படங்கள் அதிரடி போலீஸ் கதையாக உருவாகி உள்ளன.
இதில் குட்டாவும் சிக்ஷையும் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் படத்தின் இயக்குனருமான ராஜீவ் ரவி இயக்கி உள்ளார். இளம் நடிகரான ஆசிப் அலி இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு காக்க காக்க சூர்யாவின் நடிப்பை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
அதேபோல ஜான் லூதர் என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவும் ஒரு அதிரடி போலீஸ் கதாபாத்திரம்தான். இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது. அபிஜித் ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே சில படங்களில் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப் படமும் கதாபாத்திரமும் மாறுபட்டு இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்த இரண்டு போலீஸ் படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளன.