தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் பாபுவை கைது செய்ய தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் முதலில் இந்தியா திரும்பட்டும் அதன்பிறகு முன்ஜாமீன் பற்றி யோசிக்கலாம் என கூறிவிட்டது. இந்த நிலையில் தான் விரைவில் இந்தியா திரும்புவதாககூறி தனது ரிட்டர்ன் டிக்கெட்டையும் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் விஜய்பாபு.
இதற்கிடையில் விஜய்பாபு தற்போது நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருந்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்றும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.