நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆனால் தெலுங்கில் 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் டாக்டர் ராஜசேகர். தற்போதும் அவர் ஹீரோவாகத்தான் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படத்தின் ரீமேக்கில் நடித்தார் ராஜசேகர். சேகர் என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக ராஜசேகர் மீதும் அவர் மனைவி ஜீவிதா மீதும் பைனான்சியர் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சேகர் படம் வெளியாவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு அவரது பணத்தை செட்டில் செய்வதாக ராஜசேகர் ஜீவிதா தம்பதியினர் கூறியிருந்தனர் ஆனால் பணத்தை செட்டில் செய்யாமலேயே படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சேகர் படத்தை ஞாயிறு மதியம் முதல் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டாக்டர் ராஜசேகர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த படம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம். ரசிகர்களிடம் இதற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விரைவில் இந்த படம் மீண்டும் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என நம்புகிறேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.