நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் 80, 90களில் மிரட்டல் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பீமன் ரகு. இந்த நாற்பது வருடங்களில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள பீமன் ரகு, சமீப காலமாக குணச்சித்திர நடிகராக மாறி அதிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது 68 வயதாகும் பீமன் ரகு முதன்முறையாக இயக்கத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஆம்.. 'சாண (சாணை) என்கிற படத்தை இயக்குவதுடன் அந்தப்படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். ஒருமுறை சாணை தீட்டுபவர் ஒருவரை அருகில் இருந்து கவனித்த பீமன் ரகுவுக்கு, அவர்களது வேலை ஏதோ ஒரு விதத்தில் பிடித்துப்போய் விட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக சாணை பிடிக்கும் தொழிலாளர்கள் பலரின் வாழ்க்கை முறையை கவனித்த பீமன் ரகு, இவர்களின் வாழக்கையை படமாக்க முடிவு செய்து, தானே நாயகனாகவும் இயக்குனராகவும் மாறிவிட்டார்.
இதற்காக ஒரு கட்டத்தில் தனது வீட்டிலேயே சாணை பிடிக்கும் மிஷினை வாங்கி வந்து பயிற்சியும் எடுத்துள்ளார். சாணை பிடிக்கும் தொழில் அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறும் பீமன் ரகு, தென்காசியில் இருந்து பிழைப்புக்காக கேரளாவுக்கு குடிபுகும் ஒரு சாணை தொழிலாளியின் வாழ்க்கையை யதார்த்தமாக படமாக்கியுள்ளாராம்.