கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்து விட்ட நிலையில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றிப்படமாக்கி மலையாள திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற நகைச்சுவை படத்தையும் எடுத்து ஹிட்டாக்கினார்.
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் பிரித்விராஜ். இந்தநிலையில் சோசியல் மீடியா சாட்டிங்கில் ரசிகர்களுடன் பேசும்போது மோகன்லாலை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டீர்கள்..? மம்முட்டியை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் நிச்சயமாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறேன் அதற்காக எனது நண்பரும் லூசிபர் பட கதாசிரியருமான நடிகர் முரளிகோபி மம்முட்டிக்கு என்றே ஸ்பெஷலான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். கதை தயாரானதும் மம்முட்டியின் முன்னால் சென்று கதை சொல்வதற்கு உட்கார இருக்கிறேன்.. ஆனால் முழுக்கதையும் தயாராவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.