புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருந்ததால் தமிழ், தெலுங்கு, மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
தற்போது தெலுங்கிலும் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சன்னி லியோனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார் என்றாலும் சன்னிலியோனுக்கு படக்குழுவினர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதை உறுதி செய்வது போல சமீபத்தில் சோசியல் மீடியாவில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் சன்னிலியோன் வடநாட்டு பாணியில் ஆலு பரோட்டா தயார் செய்கிறார். கிட்டத்தட்ட 9 நிமிடத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் அவர் பரோட்டா தயார் செய்யும்போது விஷ்ணு மஞ்சு அருகில் நின்று கொண்டு சன்னிலியோனுடன் கிண்டலும் கேலியும் செய்து விளையாடுகிறார். சன்னி லியோனும் சமையல் வேலையை கவனித்துக் கொண்டே பதிலுக்கு விஷ்ணு மஞ்சுவுக்கு ஜாலியாக பதிலடி கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஷ்ணு மஞ்சு தனது மனைவி சமையல் செய்யும்போது கூட இவ்வளவு நேரம் பொறுமையாக நின்று கவனித்து இருப்பாரா என்று அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமென்ட் தெரிவித்து வருகிறார்கள்