ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் வடகறி படத்தை அடுத்து தற்போது யுவன் இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன். இந்த படத்தில் தனக்கான காட்சிகளை அவர் நடித்து முடித்து விட்டார். அதோடு இப்படத்தில் தான் நடனமாடிய ஒரு லுங்கி டான்ஸ் வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியீட்டு இருந்த சன்னி லியோன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ஜீரோ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் சிறை கம்பிகளுக்குள் தான் சிக்கித்தவிப்பது போன்று ஒரு வீடியோவையும், இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் அதை போட்டுக்கொண்டால் கொண்டாட்டம் தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது போன்று இன்னொரு வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது.