175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பிரபல நடிகை சன்னி லியோன், கேரளாவிலுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடத்தில் பணமோசடி செய்துள்ளதாக அவர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள பெரும்பாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீயாஸ். இவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் ரூ.29 லட்சம் அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சன்னிலியோன் சொன்னபடி குறித்த நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.தற்போது டிவி தொடரில் நடிப்பதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள சன்னிலியோன் மீது ஸ்ரீயாஸ் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, திருவனந்தபுரம் பூவாரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் சன்னிலியோனிடம் கேரளா போலீஸ் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று காரணமாகவே குறிப்பிட்ட அந்த தேதியில் தன்னால் ஸ்ரீயாஸ் அழைத்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சன்னிலியோன் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.