வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தென்னிந்திய நடிகையாகவே மாறிவிட்டார்.. அந்தவகையில் தெலுங்கில் அவர் ரவிதேஜாவுடன் நடித்த கிராக் என்கிற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் அல்லரி நரேஷுடன் வரலட்சுமி இணைந்து நடித்துள்ள 'நாந்தி' விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்தநிலையில் இந்த நாந்தி படத்தின் ட்ரெய்லரை வரும் பி-19ஆம் தேதி வெளியிடுவதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தார்கள்.. ஆனால் திடீரென நேற்று காலை நடிகர் மகேஷ்பாபு இந்தப்படத்தின் டிரைலரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2019ல் வெளியான மகரிஷி படத்தில் மகேஷ் பாபுவின் நண்பனாக நடித்திருந்தார் அல்லரி நரேஷ். அந்த நட்பின் அடிப்படையில் நாந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் மகேஷ்பாபு.




