ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் ஒதுங்கினார். இதனால், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலரும், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம், எப்போதும் போல் செயல்படும். மற்ற கட்சிகளுக்கு போக விரும்புவோர், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என, ரஜினி அறிவித்தார். இதையடுத்து, ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுனமூர்த்தி, புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜுனமூர்த்தி கட்சி துவக்கினால், அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், மன்ற மாவட்ட செயலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், வரும் சட்டசபை தேர்தலில், ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கப்போவதாக வரும் செய்தியும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.