போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாள நடிகர் திலீப் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் 2015ல் முறைப்படி விவாகரத்தும் பெற்றனர். இதையடுத்து கடந்த 2017ல் மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவருடைய தம்பி மற்றும் சிலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மஞ்சுவாரியர் குறித்து நீதிமன்றம் ஏதேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு திலீப்பின் தம்பி எப்படி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என திலீப்பின் வழக்கறிஞர் பிலிப் என்பவர் திலீப்பின் தம்பிக்கு பயிற்சி கொடுக்கும் ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், நடிகை மஞ்சு வாரியர் கடந்த 2012 காலகட்டத்தில் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் வீட்டில் அவர் மது அருந்துவதை பார்த்ததில்லை, அதேசமயம் வெளியே எங்காவது சென்று விட்டு அவர் வீட்டிற்கு வரும்போது அவர் மது அருந்தி இருப்பதை உணரமுடிந்தது என்றும் கூற வேண்டுமென அந்த வழக்கறிஞர் திலீப்பின் தம்பியிடம் கூறுகிறார்.
அதேபோல இது குறித்து உங்கள் அண்ணனிடம் கேட்டீர்களா என நீதிமன்றத்தில் கேட்டால், அதுகுறித்து கேட்டதற்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அண்ணன் திலீப் உங்களிடம் கூறியதாக சொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல உங்கள் அண்ணன் திலீப்புக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா என்று கேட்டால் கடந்த பத்து வருடங்களாக அவர் மதுவை தொட்டது கூட இல்லை என்று சொல்லவேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர் திலீப்பின் தம்பிக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
நடிகை கடத்தல் வழக்கில் அவரது தோழியான மஞ்சுவாரியர் ஒரு முக்கியமான சாட்சி என்பதும் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட நடிகைக்கும் திலீப்புக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் கூறியதால், மஞ்சு வாரியர் மீது இப்படி திட்டமிட்டு ஒரு அவதூறு தகவலை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக திலீப்பின் தம்பிக்கு இப்படி ஒரு பயிற்சியை கொடுத்திருக்கிறார் அந்த வழக்கறிஞர்