நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் மூலம் மலையாளத்தில் மஞ்சு வாரியரையும் அதன் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படம் மூலம் ஜோதிகாவையும் திரையுலகில் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுக்க வைத்தவர்.. துல்கர் சல்மானை வைத்து இவர் இயக்கிய சல்யூட் என்கிற திரைப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதை அடுத்து தனது அடுத்த படத்தை துவக்கியுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
இந்த படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரலாற்று திரைப்படமான உருவான காயங்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்தார். மோகன்லாலும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த அந்த படம் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் இந்த புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த படத்தின் துவக்க விழா பூஜை கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து வரும் ஏப்ரல் 20 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி துபாய், மைசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.