டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
விஸ்வ சாந்தி என்ற அறக்கட்டளை மூலமாக கேரளாவில் தொடர்ந்து தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் மோகன்லால். இந்நிலையில் பழங்குடியினர் பகுதியில் 20 பிள்ளைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார் மோகன்லால். அந்த திட்டத்திற்கு விண்டேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த திட்டம் அட்டப்பாடியில் இருந்து தொடங்கப்பட்டது. கிராமங்களிலிருந்து 20 ஆதிவாசி பழங்குடியினர் குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கல்வி அளிக்கப்படும். அவர்களது விருப்பங்கள் லட்சியங்கள் பூர்த்தி செய்ய உதவப்படும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார் மோகன்லால்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஆதிவாசி பிள்ளைகளின் 15 ஆண்டு படிப்பு மற்றும் அது தொடர்பான செலவுகள் உள்ளிட்டவற்றை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த பதினைந்து வருடங்களில் குழந்தைகளுக்கு பெற்றோராகவும், ஆசிரியராகவும் எப்போதும் இருப்பேன். தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இது போன்று குழந்தைகளை தத்தெடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால்.