ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! | கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது! | அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன் | துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் | தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி |
சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த பல புதிய நடிகர்கள் ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்றுள்ளனர். அந்த வகையில் வில்லனாக நடித்த கார்த்திகேயாவின் வலது கரங்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள நடிகர் துருவன். கார்த்திகேயாவை அஜித் துரத்தும்போது, அவருக்கு பதிலாக இன்னொருவர் ஏமாற்றுவாரே அவர்தான் இந்த தருவன். மலையாளத்தில் வெளியான குயீன் படம் மூலம் திரையுலகில் நுழைந்த இவருக்கு வலிமை திரைப்படம் அங்கே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ள துருவன், “படப்பிடிப்புக்கு செல்லும் வரை எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்க போகிறேன் தெரியாது.. வினோத் டைரக்ஷனில் நடிக்க போகிறேன் என்கிற சந்தோஷத்துடன் படப்பிடிப்புக்கு சென்ற எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கிறேன் என்பது டபுள் போனஸாக அமைந்துவிட்டது.. எல்லோரும் அஜித் சாரின் எளிமையையும் மனிதநேயம் பற்றியும் சொல்வதை கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் அதை நேரிலேயே உணர்வேன் என நான் நினைத்துப் பார்த்ததுக்கூட இல்லை..
ஒரு முறை படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தபோது அதிக குளிரால் நடுங்கி கொண்டிருந்தேன். அதை கவனித்த அஜித் அவரது உதவியாளரை அழைத்து எனக்கு சூடாக காப்பி கொடுக்கச் சொன்னதுடன் ஒரு ஹீட்டரையும் வரவைத்து எனக்கு கொடுத்து எனது குளிரை போக்கினார். அவர் இந்த அளவுக்கு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்றாலும் சக நடிகரையும் சக மனிதராகவே அவர் பார்க்கிறார் என்பதை உணர முடிந்தது.. ஆனால் இந்த படம் முடிந்து வெளியாகி இப்போதும் கூட என்னிடம் இருக்கும் ஒரே வருத்தம் அஜித் சாருடன் இணைந்து ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்பதுதான்” என கூறியுள்ளார் துருவன்.