10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

நாகார்ஜுனாவின் இளைய மகன் நடித்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இவரது அடுத்த படமாக ஏஜெண்ட் என்கிற படம் உருவாகி வருகிறது.. ரேஸ் குர்ரம் படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யாத்ரா படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் நடிக்கும் படம் இது.
இந்த படத்தில் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. படம் முழுதும் அகிலுக்கு இணையான காட்சிகள் அவருக்கும் இருக்கும்படி கதையை உருவாக்கியுள்ளாராம் கதாசிரியர் வக்கந்தம் வம்சி. இந்தநிலையில் ஆர்மி லுக்கில் மம்முட்டி இருப்பதுபோன்ற அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தி டவெளி ரூத்லஸ் சேவியர் என்கிற டேக்லைனுடன் ஏஜென்ட் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே சில கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இன்றுமுதல் மம்முட்டி கலந்துகொண்டு நடித்து வருகிறார்.