பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மலையாள நடிகர் திலீப் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் குறித்து போலீஸில் புதிய புகார் அளித்தார்
அதில் திலீப்பின் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலரை தாக்குவதற்கு திலீப் திட்டமிட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டும் இருந்தது. இதன் அடிப்படையில் தற்போது திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் திலீப்பிற்கு இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
அதேசமயம் ஏற்கனவே திலீப் மீது தொடரப்பட்ட முந்தைய வழக்கில் இன்னும் விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை என கேரள அரசு மூலமாக உச்சநீதிமன்றத்தில் தற்போது முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது திலீப்பின் வழக்கறிஞர் வாதாடும்போது, இனிமேலும் கால அவகாசம் கொடுத்து இந்த வழக்கை நீட்டிக்க கூடாது. அப்படி அவகாசம் வேண்டும் என்றால் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே கால அவகாசம் தேவை என விண்ணப்பிக்க வேண்டும்.. ஆனால் இந்த வழக்கை இன்னும் தாமதப்படுத்தும் விதமாகவே கேரள அரசு இதுபோன்று கால அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது ஏற்கனவே இந்த வழக்கில் கிட்டத்தட்ட 200 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் திடீரென யாரோ ஒரு புதிய நபர் புதிதான சில குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி இந்த வழக்கை திசை திருப்பும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். அதனால் இந்த புதிய கால அவகாசம் வழங்கப்பட்டால் அது இந்த வழக்கை வேறு திசையில் இழுத்துச் செல்லும் விதமாக அமைந்து விடும். எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தனது வாதங்களை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தற்சமயம் நிலுவையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.