தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இந்த படத்தின் வெற்றியால் தமிழிலும் மலையாளத்திலும் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்தநிலையில் இரண்டு மின்னல் முரளிகளும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். டொவினோ தாமஸ் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் குரு சோமசுந்தரம். இதுபற்றி தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குரு சோமசுந்தரம் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, “இன்று ஜெய்சனும் ஷிபுவும் சந்தித்துக்கொண்டனர். ஜெய்சன் வீட்டில் எங்களுக்கு அன்பான வரவேற்பும் அருமையான உணவும் கிடைத்தது.. இதனால் ஜெய்சன் மீது இருந்த பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, நான் நல்லவனாக திருந்தி விட்டேன்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் ஜெய்சன் ஆக டொவினோ தாமஸும் ஷிபுவாக குரு சோமசுந்தரமும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.