தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா |

நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறியபோது அவரது முதல் பட ஹீரோவாக நடித்தவர் மோகன்லால்.. சமீபத்தில் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கிய ப்ரோ டாடி படத்திலும் மோகன்லால் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த ஆழமான நட்பின் அடைப்படையில் தான், முதன்முதலாக மோகன்லால் இயக்குனராகும் பாரோஸ் என்கிற படத்தில் பிரித்விராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
ஆனால் கொரோனா இரண்டு அலைகளின் காரணமாக மோகன்லால் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் தள்ளிப்போனது என்றால் இன்னொரு பக்கம் பிரித்விராஜ் முடித்துக்கொடுக்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அந்தவகையில் மோகன்லால் படத்திற்காக இவர் ஒதுக்கிய தேதிகள் எல்லாம் கொரோனா இரண்டாவது அலை சமயத்திலேயே காலாவதி ஆகிவிட்டனவாம்.
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பமான சமயத்தில் நிறுத்தப்பட ஆடுஜீவிதம் படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை விரைவில் மீண்டும் வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக பிரித்விராஜ் வெளிநாடு கிளம்புவதால் உள்ளூரில் முடிக்கவேண்டிய படங்களை வேகவேகமாக முடித்து வருகிறார்.
இதனால் மோகன்லால் படத்தில் இருந்து பிரித்விராஜ் விலகிவிட்டார் என்கிற செய்தி ஒன்று தற்போது கசிந்துள்ளது. சமீபத்தில் கூட நடிகர் குரு சோமசுந்தரத்திடம் பேசிய மோகன்லால், எனது படத்தில் உங்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் பயணத்திற்கு தயாராக இருங்கள் என கூறியிருந்ததாக செய்தி வெளியானது.. இதை சுட்டிக்காட்டி பிரித்விராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் குரு சோமசுந்தரத்துக்கு மோகன்லால் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.