பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

அரசியலில் இருந்து ஒதுங்கியபின் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸையும், ஹீரோவாகவே துவங்கிய சிரஞ்சீவி தற்போது கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டவர், தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154 படமும் கடந்த மாதம் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவி அன்டர்கவர் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்திற்கு வால்டர் வீரய்யா என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடைபெறும் கதையாக இந்தப்படம் உருவாகிறது.




