10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. ஜோசப் புகழ் நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான இந்தப்படம் சென்சார் செய்யப்படாமலேயே வெளியானது.
படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது படம் வெளியானபோதே சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சென்சார் போர்டு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தப்படம் எங்களால் தணிக்கை செய்யப்படவில்லை என சென்சார் போர்டு ஏற்கனவே கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.