ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் வரும் டிச-2ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.
படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சீரான இடைவெளியில் நடந்து வருகின்றன. இந்தப்படம் கடல் மற்றும் கப்பல் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை தற்போது கப்பலில் நடத்தி பிரமிக்க வைத்துள்ளார்கள்.
படக்குழுவினருடன் ரசிகர்கள் சிலரும் மற்றும் கடற்படை அதிகாரிகளும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர், இதுகுறித்த வீடியோ ஒன்றை மோகன்லால் வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலக வரலாற்றில் இதேபோன்று கப்பலில் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்துவதும் இதுதான் முதன்முறை.