ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள ‛மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் ஓடிடியில் தான் ரிலீஸாக போகிறது என்பது உறுதியாகி விட்டது. அப்படி தியேட்டர்களில் மரைக்கார் படத்தை வெளியிடுவதாக இருந்தால், அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கேட்ட தியேட்டர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்த்த முன்பணமும் தர முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவிட்டனர்.
இதனால் தற்போது மரைக்கார் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்றே உறுதியாக முடிவெடுத்து விட்டார் ஆண்டனி பெரும்பாவூர். அதுமட்டுமல்ல, இவரது தயாரிப்பில் மோகன்லால் நடித்துள்ள மற்ற நான்கு படங்களான ப்ரோ டாடி, அலோன், ட்வல்த் மேன் மற்றும் புலிமுருகன் இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படம் என அனைத்தையுமே ஓடிடியில் வெளியிடும் முடிவையும் அவர் எடுத்துவிட்டாராம்.
மரைக்கார் படம் சுமார் 83 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் அது எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்பதற்காகவே ஓடிடி முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் நடந்த பேச்சு வார்த்தையின்போது தனது மனதை காயப்படுத்தி விட்டதால் தான், தனது மற்ற படங்களையும் ஓடிடியில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அதேசமயம் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு படத்திற்கு தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்பதால் அந்தப்படம் மட்டும் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.