சென்னை தந்த தனிமை… மாளவிகா மோகனன் வருத்தமும், மகிழ்வும்… | பிளாஷ்பேக்: நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம், டி ஆர் ராஜகுமாரியின் கடைசிப் படம் கவிஞர் கண்ணதாசனின் “வானம்பாடி” | சல்மான் படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா | 'ஷார்ட்ஸ்' வீடியோக்களால் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் | 'மேட் இன் கொரியா' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பாராட்டு | மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷ் ஹாப்பி | ஏப்., 4ல் ‛பேட்ரியாட்' டிரைலர் ரிலீஸ் | 2026ன் மூன்றாவது, இரண்டாம் பாகப் படமாக 'காளிதாஸ் 2' நாளை ரிலீஸ் | அதிகம் சம்பளத்திற்காக ‛லீடர்' படமா... : துரை செந்தில்குமார் பேட்டி | ஏப்ரல் முதல் வார ஓடிடி ரிலீஸ் : அனைத்தும் புதுவரவுகள் தான்....! |

மலையாளத்தில் கடந்த 2019ல் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் 'கப்பேலா' இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக பேபி அனிகா அறிமுகமாகிறார் என்றும் இந்தப்படத்திற்கு புட்டபொம்மா என டைட்டில் வைத்திருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதேசமயம் இந்தப்படத்தின் ரீமேக் உரிமை தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றம் தற்காலிக தடை வித்திருந்ததால் இந்தப்படத்தை ரீமேக் செய்வதில் சிக்கல் நிலவியது.
இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் முஹமது முஸ்தாபாவுடன் இணைந்து பணியாற்றியதுடன் இந்தப்படத்தின் கதை உருவாக்கத்திலும் அவருடன் இணைந்து ஈடுபட்டவர் உதவி இயக்குனர் சுதாஸ். இவர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் கதையிலும் ஏ.ஆர்முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றியவர். இவர் கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையில் தனக்கும் பங்கு இருக்கிறது என கூறி, தனது அனுமதி இல்லாமல் இதன் ரீமேக் உரிமையை விற்றது செல்லாது என தடைகோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்காக தனக்கு கோ-ரைட்டர் என்கிற முறையில் சம்பளம் தரப்பட்டது உள்ளிட்ட ஆதாரங்களையும் அவர் முன் வைத்தார். அதனால் நீதிமன்றம் இந்தப்படத்திற்கு தற்காலிக தடை விதித்திருந்தது. அதேசமயம் படத்தின் இயக்குனர் முஹமது முஸ்தாபா தன்னிடம் இருந்த சில முக்கியமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் ரீமேக் உரிமை மீது விதித்திருந்த தடையை தற்போது நீக்கியுள்ளது.